அரசு பள்ளிக்கு மேம்படுத்தப்பட்ட வகுப்பறை துவக்கம்

அரசு பள்ளிக்கு மேம்படுத்தப்பட்ட  வகுப்பறை துவக்கம்
X

உடுமலை பூலாங்கிணறு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மேம்படுத்தப்பட்ட வகுப்பறை திறக்கப்பட்டது .

உடுமலை அடுத்த பூலாங்கிணறு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மேம்படுத்தப்பட்ட வகுப்பறை கட்டட திறப்பு விழா நடந்தது.

உடுமலை அடுத்த பூலாங்கிணறு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மேம்படுத்தப்பட்ட வகுப்பறை கட்டட திறப்பு விழா நடந்தது. தலைமையாசிரியர் விமலா, தலைமை வகித்தார். முன்னதாக, உதவி ஆசிரியர் சுதா, வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் சரவணன், பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா, சின்னப்பூலாங்கிணறு பள்ளி தலைமையாசிரியர் உமாமகேஸ்வரி ஆகியோர் பேசினர். மேம்பாட்டு பணிக்கு உதவிய பிரீமியர் மில் நிறுவன தலைவர் ஜெகதீஷ்சந்திரன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த பள்ளியில், நூலகம், கம்ப்யூட்டர் வகுப்பறை என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவ, மாணவியருக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!