இல்லம் தேடி கல்வி: கலைப்பயணம் துவக்கம்

இல்லம் தேடி கல்வி: கலைப்பயணம் துவக்கம்
X

அவிநாசி வட்டாரத்தில், இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்பான பயணம் துவங்கியது.

அவினாசி வட்டார அளவிலான, ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ தொடர்பான கலைப்பயணம் துவங்கியது.

கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக பள்ளிக்கும், மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்கும் நோக்கில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின் மூலம், 'இல்லம் தேடி கல்வி' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் நோக்கத்தை மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் வகையில், விழிப்புணர்வு கலைப்பயணம் நேற்று துவங்கியது. அவிநாசி வட்டார வள மையத்தில் துவங்கிய இப்பயணத்தை வட்டார கல்வி அலுவலர்கள் ஜஸ்டின் ராஜ், ஜோதிபிரகாஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை (பொறுப்பு) திலகவதி, முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில், அவிநாசி வட்டார வள மைய பொறுப்பாளர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai as the future