அவினாசி வட்டாரத்தில் ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறியும் முகாம்

அவினாசி வட்டாரத்தில் ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறியும் முகாம்
X
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் ஆரோக்கியமான குழந்தைகளைக் கண்டறியும் முகாம் திருமுருகன்பூண்டியில் நடைபெற்றது.

போஷன் அபியான் திட்டத்தின் கீழ், மார்ச் 21 முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை 0 முதல், 6 வயது வரையிலான ஆரோக்கியமான குழந்தைகளைக் கண்டறியும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, அவிநாசி வட்டாரத்தில் அனைத்து குழந்தைகள் மையங்கள், தனியார் நர்சரி பள்ளிகள், ஆரம்பப் பள்ளிகளில் உள்ள அனைத்து குழந்தைகளின் எடை, உயரம் கண்டறிந்து ஆரோக்கியமான குழந்தையைக் கண்டறியப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக திருமுருகன்பூண்டி நேரு வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற முகாமை குழந்தை வளர்ச்சித் திட்டத்தினர், அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கத்தினர், பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். இம்முகாமில் 250க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!