/* */

அவினாசி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

அவிநாசியில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில், அனுமர் ஜெயந்தி விழா நடந்தது.

HIGHLIGHTS

அவினாசி ஆஞ்சநேயர் கோவிலில்  அனுமன் ஜெயந்தி விழா
X

ஆஞ்சனேயர் ஜெயந்தியை ஒட்டி, நெருப்பு பந்து சுழற்றுதல் மற்றும் களரி ஆகிய வீர விளையாட்டுகளும் கோவில் வளாகத்தில் நடைபெற்றன. 

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. 1ம் தேதி காலை, மூலமந்திர ஹோமம், ஆராதனையுடன் விழா துவங்கியது. அன்று மாலை, 6:30 மணிக்கு, சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன், வில்லிபாரத சொற்பொழிவு நிகழ்த்தினார்.

நேற்று, அதிகாலை வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சுந்தரகாண்ட அனுமன் சிறப்பு சொற்பொழிவும், அன்னதானமும் நடைபெற்றது. மாலை, கோத்தகிரி, தத்வன சைதன்யா சுவாமி ஜி குழுவினரின் பக்தி பஜனை நடைபெற்றது.

பிறகு, வாள் வீச்சு, நெருப்பு பந்து சுழற்றுதல் மற்றும் களரி ஆகிய வீர விளையாட்டுகளும் இடம் பெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்த பேரவையினர் செய்திருந்தனர்.

Updated On: 4 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  2. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  3. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  4. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  9. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  10. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!