அவினாசியில் ஆலங்கட்டி மழை: செல்போன் கடையில் சூழ்ந்த வெள்ளம்

அவினாசியில் ஆலங்கட்டி மழை:  செல்போன் கடையில் சூழ்ந்த வெள்ளம்
X
தாமரை குளத்தில் நிரம்பி வழியும் மழைநீர்.
அவிநாசியில் பெய்த ஆலங்கட்டி மழையில், மொபைல் கடை, அரசு மாணவியர் விடுதிக்குள் வெள்ளம் புகுந்தது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை 6:00 மணி துவங்கி இரவு வரை, இடி, மின்னலுடன், ஆலங்கட்டி மழை பெய்தது. வீடுகளில் உள்ள சிறுவர், சிறுமியர் ஆலங்கட்டியை கையில் எடுத்து மகிழ்ந்தனர். பிரதான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கனமழையால் புதிய பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள மொபைல் கடைக்குள், மழைநீர் புகுந்தது. அவற்றை தடுத்து நிறுத்த, கடை ஊழியர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. பிறகு தண்ணீரை இறைக்கும் வாகனம் வரவழைக்கப்பட்டு, கடைக்குள் சூழ்ந்திருந்த வெள்ளம் வெளியேற்றப்பட்டது. அவிநாசி சீனிவாசபுரம் பகுதியில் உள்ள அரசு மாணவியர் விடுதிக்குள் மழைநீர் புகுந்ததால், விடுதிக்குள் இருந்த, 15 மாணவியர், அருகேயுள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

கனமழை காரணமாக அவினாசி தாமரைக்குளம், நல்லாற்றில், இரவு வெள்ளம் பெருக்கெடுத்தது. திருப்பூர் மாவட்ட அளவில் அதிகபட்சம், அவினாசியில், 79 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture