மூதாட்டி காதை அறுத்து கம்மல் பறிப்பு

மூதாட்டி காதை அறுத்து கம்மல் பறிப்பு
X

பைல் படம்.

அவினாசியில் மூதாட்டியின் காதை அறுத்து, கம்மலை பறித்துச் சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அவினாசி கைகாட்டிபுதூர், ராயம்பாளையம் பகுதியில் உள்ள அய்யன்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (50). இவரது பெரியம்மா பழனாத்தாள் (70). வீட்டின் அருகேயுள்ள குளக்கரையில் மேய்ந்து கொண்டிருந்த தனது மாடுகளை பிடித்து வர, பழனியம்மாள் சென்றுள்ளார்.

அப்போது அங்குள்ள புதர்மறைவில் இருந்து வந்த வாலிபர் ஒருவர், தனது கையில் வைத்திருந்த ஆயுதத்தால், பழனியம்மாளின் காதுகளை அறுத்து, அவர் அணிந்திருந்த, இரண்டரை பவுன் தங்க கம்மலை பறித்துச் சென்றுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அவினாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

புகாரின் பேரில் அவினாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான வாலிபரை தேடி வருகின்றனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவம், அவினாசி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்