அவிநாசியில் 'வருமுன் காப்போம்' திட்ட மருத்துவ முகாம்: 542 பேர் பலன்

அவிநாசியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்: 542 பேர் பலன்
X

அவிநாசியில் நடந்த, அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமில், பொதுமக்களுக்கு மருத்துவப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவினாசியில் நடைபெற்ற, தமிழக அரசின் இலவச மருத்துவ முகாமில், 542 பேர் பலன் அடைந்தனர்.

தமிழக அரசின், 'வருமுன் காப்போம்' திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, பழங்கரை ஊராட்சி, அவிநாசிலிங்கம்பாளையத்தில், மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமை, பழங்கரை ஊராட்சி மன்ற தலைவர் கோமதி, துவக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சக்திவேல், பழங்கரை ஊராட்சி உறுப்பினர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் பொது மருத்துவம், இதய நோய் சிகிச்சை, சர்க்கரை நோய், பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வகை நோய்களுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில், 304 ஆண்கள், 238 பெண்கள் உட்பட, மொத்தம் 542 பேர் பங்கேற்று பரிசோதனை மற்றும் ஆலோசனை பெற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!