அன்னூர் இந்து முன்னணி நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அன்னூர் இந்து முன்னணி நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X
அன்னூரை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி மீது, குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவிநாசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அன்னூரை சேர்ந்தவர் குட்டி என்கிற ராஜேந்திரன், 40. இவர், இந்து முன்னணியின், கோவை வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். கடந்த மாதம் அன்னூர் அருகே பைனான்ஸ் அதிபரை கொலை செய்த வழக்கில் ராஜேந்திரன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குட்டி என்கிற ராஜேந்திரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கோவை ரூரல் எஸ்பி பத்ரிநாராயணன் கோவை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதையேற்று, அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவு பொள்ளாச்சி சிறையில் உள்ள குட்டி என்கிற ராஜேந்திரனிடம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai marketing future