ஆடு, கோழிகளை கடித்து குதறிய தெரு நாய்கள்

ஆடு, கோழிகளை கடித்து குதறிய தெரு நாய்கள்
X

நாய்களால் கடிபட்டு இறந்த ஆடுகள். 

அவினாசி அருகே, நாய்கள் கடித்து குதறியதில், ஆடு, கோழிகள் பலியாகின.

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகேயுள்ள சின்னேரிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட வளையபாளையம், முள்ளிக்காடு பகுதியில் சுறறித்திரியும் நாய்கள், அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஆடு, கோழிகளை கடித்து கொன்று விடுகின்றன. கடந்த, வாரம், 16 கோழிகளை கடித்து கொன்றன. நேற்று, 6 ஆடுகளை கடித்ததில், அவை இறந்தன. ஏழு ஆடுகள் காயமடைந்தன. அப்பகுதியில் உள்ள இறைச்சிக்கடையில் இருந்து வெளியேறும் இறைச்சி கழிவுகளை உண்டு பழகிய நாய்கள், ஆடு, கோழிகளை தாக்குகின்றன என, அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!