தெக்கலூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
திருப்பூர் மக்கள் அமைப்பு, பெண் குழந்தைகள் நலம் மற்றும் கல்வி அமைப்பின் மூலம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
திருப்பூர் மக்கள் அமைப்பு, பெண் குழந்தைகள் நலம் மற்றும் கல்வி அமைப்பின் மூலம் நடத்தப்பட்டது. அவினாசி அருகேயுள்ள தெக்கலுாரில் நடந்த நிகழ்வை, ஊராட்சி மன்ற தலைவர் மரகதமணி துவக்கி வைத்தார். திருப்பூர் மக்கள் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மெல்வின், பேசினார். ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, சித்ரகலா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், இன்றைய குழந்தைகளின் நிலை மற்றும் குழந்தை உழைப்புக்கு எதிரான சட்டம், பெண் குழந்தைகளின் கல்வி குறித்து, சமூக சமத்துவம் மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இயக்குனர் பாண்டிச்செல்வி பேசினார். வளரிளம் பெண்களுக்கு, பணிபுரியும் இடங்களில் வழங்க வேண்டிய கண்ணியமான பணிச்சூழல், உள் புகார் குழு குறித்து, ரேவதி பேசினார்.
அவினாசி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் அனுராதா பேசினார். நியூ ஹோப் மிஷன் இயக்குனர் மணியம் இம்மானுவேல் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu