'ஒரு விரல் புரட்சிக்கு தயாராகுங்க...' மாணவர்களுக்கு அழைப்பு

ஒரு விரல் புரட்சிக்கு தயாராகுங்க... மாணவர்களுக்கு அழைப்பு
X

அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில், வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

'கல்லூரி மாணவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்' என, அறிவுரை வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி சட்டசபை தொகுதியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட திருத்த பணிகளை மேற்கொள்ள இன்றும், நாளையும், சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அவிநாசி தொகுதியில், மொத்தம், 313 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லுாரியில், தாசில்தார் ராகவி, மாணவ, மாணவியர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

'18 வயது நிரம்பிய வாக்காளர் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை இணைத்து, தேர்தலில் ஒட்டளிக்க வேண்டும். மொபைல்போன் உதவியுடன், இணைய வழியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்' என்றார். கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) ஹேமலதா, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் அழகரசன் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!