அவினாசியில் நடந்த நிகழ்ச்சியில் கிசான் அட்டை பெற விவசாயிகள் ஆர்வம்

அவினாசியில் நடந்த நிகழ்ச்சியில் கிசான் அட்டை பெற   விவசாயிகள் ஆர்வம்
X

அவினாசியில் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் இயற்கை வேளாண் பெருவிழா நடந்தது.

அவினாசியில் நடந்த வேளாண் பெருவிழாவில் கிசான் அட்டை பெறுவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டினார்கள்.

அவினாசியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம், பொங்கலூர், வேளாண்மை அறிவியல் நிலையம், மற்றும் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியை, வேளாண்மை துணை இயக்குனர் மகாதேவன் துவக்கி வைத்தார். அவிநாசி ஒன்றிய குழு தலைவர் ஜெகதீசன், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம், அவினாசி வேளாண் உதவி இயக்குனர் அருள்வடிவு ஆகியோர், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

வேளாண்மை துறை மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமரின், இயற்கை வேளாண்மை குறித்த விளக்கவுரை, திரையில் காண்பிக்கப்பட்டது. வேளாண் விஞ்ஞானிகள், பல்வேறு தொழில் நுட்பம் குறித்து பேசினர்.

ஏராளமான விவசாயிகள் கிசான் திட்டம், விவசாய கடன் உதவி திட்ட அட்டை பெறுவதற்காக விண்ணப்பித்தனர். நிகழ்ச்சியில், வேளாண் பொறியியல் துறை, தொழில்நுட்பம், வணிகம் மற்றும் விற்பனை, தோட்டக்கலைத்துறை சார்பில் கண்காட்சி அரங்குகளும் இடம் பெற்றிருந்தன.

Tags

Next Story
ai in future education