சேவூர் அருகே இலவச சட்ட உதவி முகாம்: பொதுமக்கள் பங்கேற்பு

சேவூர் அருகே இலவச சட்ட உதவி முகாம்: பொதுமக்கள் பங்கேற்பு
X

அவிநாசி அருகே இலவச சட்ட உதவி முகாம் நடந்தது.

அவினாசி வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில், சேவூர் அருகேயுள்ள சாவக்காட்டுபாளையத்தில் இலவச சட்ட உதவி முகாம் நடத்தப்பட்டது.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின், வெள்ளிவிழாவை முன்னிட்டு, அவினாசி வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில், திருப்பூர் மாவட்டம், அவினாசி சேவூர் அருகேயுள்ள சாவக்காட்டுபாளையத்தில், இலவச சட்ட உதவி முகாம் நடத்தப்பட்டது.

தத்தனுார் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார், வரவேற்று பேசினார். அவினாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் விபிசி, தலைமை வகித்து, சட்ட உதவி முகாமின் பயன் குறித்து பேசினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி அப்சல் பாத்திமா, முன்னிலை வகித்தார். மூத்த வக்கீல் சுப்ரமணியம், வக்கீல் திருமூர்த்தி ஆகியோர் பேசினர். முகாமில், பொதுமக்களிடம் இருந்து, இலவச வீட்டுமனைப்பட்டா உட்பட பல்வேறு தேவைகள் சார்ந்த மனுக்கள் பெறப்பட்டன. நுாறுக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story