அவினாசி: புதுப்பாளையம் ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம்

அவினாசி: புதுப்பாளையம் ஊராட்சியில்  இலவச கண் சிகிச்சை முகாம்
X

புதுப்பாளையம் ஊராட்சியில், இலவச கண் சிகிச்சை முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. 

அவினாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சியில், இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சியில், அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் திருப்பூர் மாவட்ட பார்வையிழப்பு சங்கம் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

புதுப்பாளையம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முகாமிற்கு, ஊராட்சித் தலைவர் கே.பி. கஸ்தூரி பிரியா, துணைத்தலைவர் சங்கீதா, ஒன்றிய கவுன்சிலர்கள் பி. முத்துசாமி, பி. சித்ரகலா மற்றும் கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.

கிழக்கு ரோட்டரியின் தலைவர் விஜித்ரா செந்தில்குமார், செயலாளர் செல்வராணி, பொருளாளர் ஆனந்தி உள்ளிட்டோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். முகாமில், கண் புரை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட கண் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!