அன்னூரில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம் - பயன்பெற அழைப்பு

அன்னூரில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம் - பயன்பெற அழைப்பு
X

கோப்பு படம் 

அன்னூரில், நாளை இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது.

அவினாசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, அன்னுார் தக்னி சுன்னத் ஜமாத் மற்றும் லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில், பள்ளிவாசல் வீதியிலுள்ள பெரிய பள்ளிவாசலில், நாளை காலை, 9:30 முதல் மாலை, 3:30 மணி வரை, இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.

இந்த முகாமில் பார்வை குறைபாடு, கண்ணில் நீர் வடிதல், கண் புரை உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். பொதுமக்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என, ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!