முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா
X

அவினாசி பாஜகவினர் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது .

அவினாசி நகர பா.ஜ., கட்சியினர், முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாய் பிறந்தநாளை கொண்டாடினர்.

அவினாசி பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில் நடந்த நிகழ்ச்சியில், அவரின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அவரது ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் குறித்து விளக்கப்பட்டன. இதில், மாவட்ட ஊடகப்பிரிவு துணைதலைவர் சந்துரு, ஊரகப்பிரிவு மாவட்ட தலைவர் தினேஷ்குமார், பிரசாரபிரிவு மாவட்ட செயலாளர் வக்கீல் ரமணி, நகர பொருளாளர் விஜயகுமார், நகரதலைவர் சுரேஷ், மகளிர் அணி தலைவர் சித்ரா, கிளைதலைவர்கள், நகர அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!