அவிநாசியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இயற்கை ஊட்டச்சத்து உணவு

அவிநாசியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இயற்கை  ஊட்டச்சத்து உணவு
X

அவிநாசியில் பா.ஜ.க. சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இயற்கை ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.

அவிநாசியில் பா.ஜ., சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு, இயற்கை ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., மகளிர் அணி சார்பில், மாவட்டம் முழுவதும் 'போஷன் அபியான்' ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டம், அவிநாசி நகரில் அங்கன்வாடி மையங்கள் அமைந்துள்ள ராயம்பாளையம், முத்துசெட்டிபாளையம், தாமஸ்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்தான இயற்கை உணவுகள் வழங்கப்பட்டது.

நகர மகளிர் அணி பொது செயலாளர் உமாமகேஷ்வரியுடன் இணைந்து மகளிரணி நிர்வாகிகள், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!