அவினாசிலிங்கேஸ்வரர் கோயிலில் சித்திரை மாத தேர் திருவிழா கொடியேற்றம்

அவினாசிலிங்கேஸ்வரர் கோயிலில் சித்திரை மாத தேர் திருவிழா கொடியேற்றம்
X

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் முகப்பு தோற்றம் (பைல் படம்).

அவினாசியில் காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்புப் பெற்ற அவினாசி லிங்கேஸ்வரர்-கருணாம்பிகை அம்மன் கோவில் உள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும் காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்புப் பெற்ற அவினாசி லிங்கேஸ்வரர்-கருணாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு மே மாதம் 2-ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

விழாவையொட்டி இன்று காலை கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரம் சுத்தம் செய்யப்பட்டு கொடி மரத்திற்கு மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. காலை 6 மணியளவில் கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி நாளை 26-ம் தேதி சூரிய சந்திர மண்டல காட்சிகள், 27-ம் தேதி கிளி, பூத, அன்ன வாகன காட்சிகள் நடக்கிறது. 28-ம் தேதி கைலாச வாகனம், புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியும், 29-ம் தேதி இரவு 10 மணிக்கு 63 நாயன்மார்கள், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. 30-ம் தேதி கற்பக விருட்சம், திருக்கல்யாணம், யானை வாகன காட்சிகள் நடக்கிறது.

மே 1-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நடக்கிறது. 2-ம் தேதி திருத்தேர் வடம் பிடித்து சிறிது தூரம் இழுக்கப்படுகிறது. பின்னர் 3-ம் தேதி தேர் இழுக்கப்பட்டு நிலை வந்தடையும் . 4-ம் தேதி அம்மன் தேரோட்டம் நடக்கிறது. 5-ம் தேதி பாரிவேட்டை நிகழ்ச்சி, 6-ம் தேதி இரவு தெப்ப விழா நடக்கிறது. 8-ம் தேதி மஞ்சள் நீர் விழாவுடன், விழா நிறைவடைகிறது.

Tags

Next Story
அலுமினிய தாள் பயன்படுத்துறீங்களா? அச்சச்சோ உடனே இத தெரிஞ்சிக்கோங்க..!