அன்னூர் அருகே பஞ்சு குடோனில் தீ: ரூ.40 லட்சம் மதிப்பிலான பஞ்சு சேதம்

அன்னூர் அருகே பஞ்சு குடோனில் தீ: ரூ.40 லட்சம் மதிப்பிலான பஞ்சு சேதம்
X
அன்னூர் கரியாம்பாளையம் அருகே பஞ்சு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கரியம்பாளையம் பகுதியில், மயிலேஸ்வரி என்பவருக்கு சொந்தமான பஞ்சு மில் குடோன் உள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக குடோன் கடந்த சில நாட்களாக இயக்கப்படவில்லை. தொழிலாளர்கள் யாரும் இல்லாத நிலையில், நேற்று மாலை குடோனில் வைக்கப்பட்டிருந்த பஞ்சில் திடீரென தீப்பற்றியுள்ளது.

சிறிது நேரத்தில் குடோன் முழுவதும் இருந்த பஞ்சுகளில் தீ பரவி மளமளவென ஏறிய தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த விபத்தில் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின. அன்னூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
crop opportunities ai agriculture