பனியன் நிறுவன விடுதியில் உ.பி. பெண் தொழிலாளி தற்கொலை

பனியன் நிறுவன விடுதியில் உ.பி. பெண் தொழிலாளி தற்கொலை
X

தற்கொலை செய்துகொண்ட பெண் தொழிலாளியின் சடலத்தை பார்ப்பதற்காக வந்த சக தொழிலாளர்கள்.

அவினாசியில், பனியன் நிறுவன விடுதியில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி, ஈரோடு சாலையில், கைகாட்டிபுதுார் பகுதியில் ஏற்றுமதி நிறுவனம் செயல்படுகிறது. உள்ளூர், பிற மாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் இங்குள்ள விடுதியில் தங்கி பணிபுரிகின்றனர். இதில், உ.பி., மாநிலத்தை சேர்ந்த நிர்மலா, 27 என்ற பெண் தொழிலாளி, நேற்று முன்தினம் மாலை, விடுதி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலம், அவிநாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது.

இதற்கிடையில், மருத்துவமனை பிரேத அறையில் உள்ள நிர்மலாவின் உடலை பார்க்க, நேற்று மதியம், சக பெண் தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். இதுகுறித்து, அவினாசி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business