அவினாசி அருகே வஞ்சிபாளையத்தில் பெடரல் வங்கி ஏடிஎம் மையம் திறப்பு
அவினாசி அருகே, புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சிபாளையத்தில், பெடரல் வங்கி ஏடிஎம் திறப்பு விழா நடைபெற்றது.
கேரளாவின் கொச்சியை தலைமையகமாகக் கொண்ட பெடரல் வங்கி, நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்தியாவின் 4வது மிகப்பெரிய வங்கியான இது, வாடிக்கையாளர் நலனே குறிக்கோள் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
வாடிக்கையாளர்களுக்கு கடனுதவி, தொழில் தொடங்க நிதி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது. குறிப்பாக ஊரகப் பகுதிகளின் நலன் மீது கவனம் செலுத்தி, வங்கி கிளைகளை தொடங்கி, நிதி சார்ந்த பல்வேறு பணிகளை, பெடரல் வங்கி சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
அவ்வகையில், திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வஞ்சிபாளையத்தில் பெடரல் வங்கி கிளை அண்மையில் தொடங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், வஞ்சிபாளையத்தில் பெடரல் வங்கி ஏடிஎம் மையத் திறப்புவிழா, அண்மையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, வங்கியின் சென்னை மண்டல மூத்த துணைத் தலைவர் இக்பால் மனோஜ், தலைமை வகித்தார். ஏடிஎம் மையத்தை, வங்கி துணைத் தலைவர் சித்ரா பானு திறந்து வைத்தார். இவ்விழாவில், கோவை மண்டலத்தின் தலைமை உதவி துணைத் தலைவர் பெட்டி ஆண்டனி, வஞ்சிபாளையம் பெடரல் வங்கி கிளையின் முதுநிலை மேலாளர் பிரசாந்த், வங்கி கிளை ஊழியர்கள் , வாடிக்கையாளர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu