கிறிஸ்துமஸ் முன்னிட்டு பேரூராட்சி ஊழியர்களுக்கு விருந்து

கிறிஸ்துமஸ் முன்னிட்டு பேரூராட்சி ஊழியர்களுக்கு விருந்து
X

கோப்பு படம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அன்னுார் பேரூராட்சி ஊழியர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.

அவினாசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அன்னுார் பேரூராட்சியில், நிரந்தர, தற்காலிக மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என, 140 பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, எல்.ஜே.வி., ஊழியத்தின் நிறுவனர் ஜெரால்ட், மேசியாவின் அற்புத ஊழியத்தின் நிறுவனர் யாபேஷ் ஜஸ்டின் ஆகியோர், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிளம் கேக் மற்றும் பிரியாணி விருந்து அளித்தனர்.

பேரூராட்சி செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இந்த விருந்து நிகழ்வில் பங்கேற்றனர். தூய்மை பணியாளர்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட விருந்துக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!