அவினாசி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்

அவினாசி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்
X

அவினாசி ஒன்றிய அலுவலகத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் அவினாசி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் அவினாசி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு, அவினாசி ஒன்றிய தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். நகர தலைவர் யுவராஜ், முன்னிலை வகித்தார். தலைவர் சண்முகம், மாநில செயலாளர் சந்திரசேகர், மாநில பொருளாளர் தங்கராஜ் மற்றும் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், கோவை மாவட்ட தலைவர் கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கொடிகம்பம் நடுவது, பெயர் பலகை வைப்பது என முடிவெடுக்கப்பட்டது. விவசாயிகள் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, தீர்வு காண்பது; அடுத்த மாதம், 5ல், பொள்ளாச்சியில் நடைபெறும் தென்னை விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில், சங்கத்தின் அவிநாசி துணை தலைவர் சின்னச்சாமி, தெக்கலூர் தலைவர் ஆறுச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!