அவினாசி அருகே பதுங்கிய சிறுத்தை 'எஸ்கேப்': வனத்துறையினர் ஏமாற்றம்
சிறுத்தை சோளக்காட்டுக்குள் தேடுதல் பணியில் ஈடுபட்ட வன ஊழியர்கள்.
திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம் பாப்பாங்குளம் ஊராட்சியில், நேற்று காலை, 6:30 மணிக்கு சோளத்தட்டு பறிக்க சென்ற வரதராஜன், 60, மாறன், 66 ஆகியோரை, அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை தாக்கி, காயப்படுத்தியது. நேற்று முன்தினம் மாலை, 5.30 மணிக்கு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வன ஊழியர் மணிகண்டன் என்பவரையும் தாக்கியது.
சிறுத்தையை கண்காணிக்க வனத்துறையினர் மூலம் அங்குள்ள தென்னை மரம், தடுப்புவேலி உள்ளிட்ட இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. கூண்டு வைத்து, அதில் இறைச்சி வைக்கப்பட்டது. 'ட்ரோன்' மூலம், சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கோவை மண்டல வன கால்நடை மருத்துவர் தலைமையில் இரண்டு கால்நடை மருத்துவ குழுவினர், மயக்க ஊசி செலுத்த தயாராக இருந்தனர்.
இன்று காலை, 10.15 மணிக்கு 'கிரேன்' வாகனத்தில், தொட்டிக்கட்டி அதன் மீது கால்நடை மருத்துவர் சுகுமாரன் மற்றும் வன ஊழியர், போலீசார் உள்ளிட்ட நான்கு பேர், மயக்க ஊசியுடன் சிறுத்தை பதுங்கியிந்த தோட்டத்தில் தேடினர். இரண்டு மணி நேரம் தேடியும் சிறுத்தை அகப்படவில்லை. வனத்துறையினருக்கு போக்கு காட்டிய சிறுத்தை, அவர்களின் கண்காணிப்பை மீறி தப்பியது தெரிய வந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu