தேர்தல் பொறுப்பாளர் கூட்டம்: பா.ஜ.க வினர் உற்சாகம்

தேர்தல் பொறுப்பாளர் கூட்டம்: பா.ஜ.க வினர் உற்சாகம்
X

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க., உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

அவினாசியில் பா.ஜ.கவின் தேர்தல் பொறுப்பாளர்கள், ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க., சார்பில் உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம், அவினசி அருகே உள்ள திருமுருகன்பூண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தின் துவக்கத்தில், கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்வேல், வரவேற்று பேசும்போது, 'நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டமாக இது அமைந்துள்ளது. அதுவும், நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஓட்டல் அரங்கில், கட்சியின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற நிர்வாகிகள் பங்கேற்று, ஆலோசனை வழங்குகின்றனர். ஆலோசனை கூட்டத்திற்கே, இத்தனை முக்கியத்துவம் என்றால், உள்ளாட்சி தேர்தலில், நாம் வெற்றி பெற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்து பேசுகையில், 'உள்ளாட்சி தேர்தலில், போட்டியிடும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றார். பா.ஜ.க., தேசிய பொது செயலாளர் அருண்சிங், தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷணன், தமிழக பா.ஜ., பார்வையாளர் சுதாகர் ரெட்டி, பொது செயலாளர் கேசவ வினாயகம், பொது செயலாளர் செல்வகுமார் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!