சேவூர் அருகே கல்வி விழிப்புணர்வு பிரசாரம்

சேவூர் அருகே கல்வி விழிப்புணர்வு பிரசாரம்
X

மங்கரசு வலையபாளையத்தில், ‘இல்லம் தேடி கல்வி’ குறித்த விழிப்புணர்வு, கலைத்துறையினரால் ஏற்படுத்தப்பட்டது.

மங்கரசு வலையபாளையத்தில், ‘இல்லம் தேடி கல்வி’ குறித்த விழிப்புணர்வு, கலைத்துறையினரால் ஏற்படுத்தப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுடைய கல்வி பாதிக்கப்படக்கூடாது, மாணவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து, கலைத்துறையினரால் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அவினாசி, சேவூர் அருகேயுள்ள மங்கரசு வலையபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கல்வி கற்பதின் நோக்கம் குறித்து ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மி, தப்பாட்டம், பொய் கால்குதிரை, நாடகங்கள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர், பள்ளி வளர்ச்சி குழுத்தலைவர் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai powered chatbots in healthcare