பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதால் மின்தடை பணிகள் ஒத்திவைப்பு

பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதால்   மின்தடை பணிகள் ஒத்திவைப்பு
X

மின்வாரிய பராமரிப்பு பணிகள் (கோப்புப்படம்)

பட்ஜெட் கூட்டத்தொடர் நடப்பதால், மின்வாரிய பராமரிப்புப்பணி மேற்கொள்வது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில், பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதனால், ஒவ்வொரு துறை சார்ந்த அதிகாரிகளும், தங்கள் துறை சார்ந்த செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

மின்வாரியத்தினர் சார்பில், பகுதி வாரியாக மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்கென, காலை முதல், மாலை வரை மின்தடை செய்யப்பட்டு, பராமரிப்பு பணி மேற்கொள்வது வழக்கம். இதற்கென அந்தந்த மின்வாரிய கோட்டத்தினர் கால அட்டவணை தயாரித்து, மின்தடை செய்து வந்தனர்.

சட்டமன்ற கூட்டத்தொடர் நடப்பதால், நாள் முழுக்க மின்தடை செய்து, பராமரிப்புப்பணி மேற்கொள்வது, ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட பணிகளையும் அதிகாரிகள் ஒத்தி வைக்கின்றனர்.

Tags

Next Story
ai marketing future