திமுக., கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் முதல்வரை சந்திக்க பயணம்

திமுக., கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் முதல்வரை சந்திக்க பயணம்
X

முதல்வரை சந்திக்க கிளம்பிய கவுன்சிலர்கள்.

திருமுருகன்பூண்டி நகராட்சியில் வெற்றி பெற்ற தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள், முதல்வரை சந்திக்க பயணமானார்கள்.

அவிநாசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, திருமுருகன்பூண்டி நகராட்சியில் நடந்து முடிந்த தேர்தலில், 27 வார்டுகளில், தி.மு.க., கூட்டணி, 17 வார்டுகளில் வெற்றி பெற்று, நகரமன்றத்தை கைப்பற்றியது. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், சொகுசு பஸ்சில் இன்று மாலை 5.30 மணிக்கு அம்மாபாளையம் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்னை சென்றனர்.

நாளை காலை அறிவாலயம் செல்லும் அவர்கள், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் ஆகியோர் முன்னிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற உள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!