அவினாசி அனைத்து மகளிர் போலீசாருக்கு டி.ஐ.ஜி பாராட்டு

அவினாசி அனைத்து மகளிர் போலீசாருக்கு டி.ஐ.ஜி பாராட்டு
X

அவினாசி அனைத்து மகளிர் காவல் நிலையம்.

அவினாசி அனைத்து மகளிர் போலீசாருக்கு, டி.ஐ.ஜி., பாராட்டு தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகேயுள்ள சேவூரில், ஆறு வயது பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கை, அவினாசி அனைத்து மகளிர் போலீசார் சார்பில் நடத்தப்பட்டு வந்தது. இந்த வழக்கில் குற்றவாளியான பிரகாஷ் என்பவருக்கு, 67 ஆண்டு சிறை தண்டனை விதித்து, திருப்பூர் மகளிர் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கை திறம்பட கையாண்ட அவினாசி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசாருக்கு, கோவை மண்டல டி.ஐ.ஜி., முத்துசாமி, வாழ்த்து தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!