முக கவசம் போடலைன்னா துாக்கிடுவேன்! எச்சரிக்கிறார் 'எமதர்மன்'

முக கவசம் போடலைன்னா துாக்கிடுவேன்!  எச்சரிக்கிறார் எமதர்மன்
X

முகக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேனர்.

முககவசம் அணிவதன் அவசியத்தை, ‘எமதர்மன்’ விளக்குவது போன்ற பேனர், மக்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க, முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு அதிகளவில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில், பூலோகம் சென்று வரும் எமதர்ம ராஜன், சித்ரகுப்தரிடம், 'அங்கு எல்லோரும் ஒரு வகை கவசம் அணிந்து இருப்பதால் அடையாளம் காண முடியாமல் போய்விட்டது. ஆதலால், முகத்தில் கவசம் அணியாதோர் சிலரை தான் இங்கு என்னால் கொண்டு வர முடிந்தது' என்பது போன்ற வாசகம் தாங்கிய 'பேனர்' அச்சிடப்பட்டு, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. சில ஆட்டோக்களிலும் அந்த வாசகம் அச்சிடப்பட்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது. இது, பொதுமக்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி வருகிறது.

அதே நேரம், இது விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் சிலர் கூறுகையில்,''முக கவசம் அணிந்தால் தான் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க முடியும் எனக்கூறுகிறார்கள்; ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், தினமும் மணிக்கணக்கில் முக கவசம் அணிந்து நாம் விடும் சுவாசக்காற்றை மீண்டும் நாமே உள்வாங்கிக் கொள்கிறோமே. இதனால், உடலுக்கு உபாதை எதுவும் வருமா என, மருத்துவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்,'' என்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்