அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் முன் தர்ணா; போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களால் பரபரப்பு

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் முன் தர்ணா; போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களால் பரபரப்பு
X

Tirupur News,Tirupur News Today- அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் முன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Tirupur News,Tirupur News Today- அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுவை மாற்றியமைக்க வலியுறுத்தி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூரை அடுத்துள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் அறங்காவலர் நியமிப்பதில் முறைகேடு நடந்ததாக கூறி, இரண்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுதிரண்டு, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

அவிநாசியில் வரலாற்று சிறப்புமிக்க கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என்றும், அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறி நேற்று காலை அவிநாசி அருகே ராயம்பாளையம், புதுப்பாளையம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுதிரண்டு வந்து கோவில் அலுவலகம் முன், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது,

நாங்கள் உரிமைக்காக போராட வந்துள்ளோம். தொடர்ந்து இரண்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அறங்காவலராக இருந்து வந்துள்ளோம். இப்போது எங்களை புறக்கணித்துவிட்டு, புதிதாக அறங்காவலர்களை நியமித்துள்ளனர். எங்களது இரண்டு ஊர்க்காரர்களுக்கு அறங்காவலர் குழு உறுப்பினர் கொடுத்த பிறகுதான் வேறு நபருக்கு கொடுக்க வேண்டும். எனவே, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவி கொடுத்த பிறகுதான், போராட்டத்தை வாபஸ் பெறுவோம். அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் அவிநாசி போலீசார், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தற்போது நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அறங்காவலர் குழுவை நீக்கிவிட்டு, எங்களது இரண்டு ஊர் நபர்களை அறங்காவலர் குழுவில் சேர்க்க வேண்டும் என்றனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோவில் அலுவலகம் முன்பு கேஸ் சிலிண்டர் அடுப்பு மூலம், சமையல் செய்து சாப்பிட்டு விட்டு தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

கோவில் செயல் அலுவலர் பெரியமருதுபாண்டி கூறுகையில், இதுகுறித்த அரசு உத்தரவு இதுவரை எங்களுக்கு வரவில்லை. பொதுமக்கள் தங்களது கோரிக்கையை மனுவாக அளித்தால், அதை இந்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க உள்ளோம், உயரதிகாரிகளின் உத்தரவுபடி, இந்த பிரச்னைக்கு சுமூகத் தீர்வு கிடைக்க செய்யப்படும், என்றார்.

கோவில் முன்பு திரளான பொதுமக்கள் ஒன்று கூடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!