அவினாசியில் டெங்கு பரவல்- உஷார் நடவடிக்கை தீவிரம்

அவினாசியில் டெங்கு பரவல்- உஷார் நடவடிக்கை தீவிரம்
X

அவினாசி நகர வீதிகளில், கொசு மருந்து தெளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டதால், கொசு மருந்து தெளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. காமராஜர் நகரில், ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கும் ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவிநாசி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், காமராஜர் நகரில், இன்று காலை, கொசு மருந்து தெளிக்கப்பட்டது. 'ஒவ்வொரு வார்டிலும், சுழற்சி முறையில் கொசு மருந்து தெளிக்கப்படும்' என, பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பொதுமக்கள் கொசு உற்பத்தியாகும் வகையில், தண்ணீரை திறந்த நிலையில் வைக்க கூடாது என, பேரூராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!