திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு வட மாநில தொழிலாளி பலி

திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு வட மாநில தொழிலாளி பலி
X
திருப்பூர் மாவட்டத்தில், டெங்கு காய்ச்சலுக்கு வட மாநில தொழிலாளி பலியானார்.

திருப்பூர் மாவட்டத்தில், சமீபநாட்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து, டெங்கு பரப்பும் கொசுக்களை அழிக்க, உள்ளாட்சி நிர்வாகத்தினர் கொசு மருந்து தெளித்து வருகின்றனர். இந்த நிலையில், திருமுருகன்பூண்டியில் வசிக்கும், 27 வயதான ஜார்க்கண்ட் மாநில தொழிலாளி, டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்டார்.

கோவை அரசு கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இறந்தார். அவர் அவினாசி அருகேயுள்ள அணைப்புதுாரில் உள்ள அட்டைப்பெட்டி தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், அங்குள்ள தொழிலாளர்களுக்கு, சுகாதாரத்துறையினர் சார்பில் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!