அவிநாசியில் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்ட பத்திரப்பதிவு அலுவலர் ‘சஸ்பெண்ட்’

அவிநாசியில் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்ட பத்திரப்பதிவு அலுவலர் ‘சஸ்பெண்ட்’
X

Tirupur News,Tirupur News Today- அவிநாசி சார்பதிவாளர் அலுவலகத்தில், ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட பத்திரப்பதிவு அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- அவிநாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்க சான்று பெற ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட பத்திரப்பதிவு அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் பத்திர பதிவு அலுவலகம் உள்ளது அவிநாசி சுற்றுவட்டாரத்தில் உள்ள 31 ஊராட்சி பகுதிகளில் நிலம், வீடு, இடம், வாங்க விற்க பொதுமக்கள் இந்த பத்திர பதிவு அலுவலகத்திற்கு வருகின்றனர். இந்த அலுவலகத்தில் தினமும் நூற்றுக்கணக்கான பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் பத்திரப்பதிவு நடக்கும் அலுவலகங்களில், அவிநாசி பத்திர பதிவு அலுவலகமும் ஒன்றாக உள்ளது.

இந்நிலையில், அவிநாசியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் கருவலூரை சேரந்த ஒருவர் வில்லங்க சான்று பெற அலுவலக தலைமை எழுத்தர் தனபாலிடம் விவரம் கேட்டுள்ளார். அதற்கு தலைமை எழுத்தர் தனபால் அலுவலக கட்டணம் ரூ.121 என்றும், ஒரு வில்லங்க சான்று பெற ரூ. 1000 செலவாகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆவணத்தில் 20 பக்கங்கள் இருப்பதால் அதற்கு குறைந்தபட்சம் ரூ. 10ஆயிரம் வேண்டும் எனவும் லஞ்சம் கேட்டுள்ளார்.

அப்போது அந்த நபர் வீட்டுக்கு சென்று பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். இந்த உரையாடல் குறித்து வீடியோ சமூக வலைத்தளங்களில், வைரலாக பரவியது.

இதுகுறித்து அவிநாசி சார்பதிவாளரிடம் கேட்டபோது இதுகுறித்து, ‘எங்களுக்கு, எழுத்துப்பூர்வமான புகார் எதுவும் வரவில்லை. இருப்பினும் இதுகுறித்து எங்களது உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம், என்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வந்த வீடியோக்களின் அடிப்படையில் தலைமை எழுத்தர் தனபாலை பணியிடை நீக்கம் செய்து, கோவை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் சாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். இது, அவிநாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!