தலைவர் நாற்காலியை அலங்கரிக்கப்போவது யார்?
பைல் படம்.
அவிநாசி பேரூராட்சி, கடந்த முறை அதிமுக., வசம் இருந்தது. இம்முறை தேர்தலில், பேரூராட்சியை தக்க வைக்க அதிமுக.,வும், பேரூராட்சியை காலுான்ற பகீரத பிரயத்தனம் செய்தன. நடந்து முடிந்த தேர்தலில், திமுக., ஏழு வார்டு, காங்., கட்சி, 2 வார்டுகளில் வெற்றி பெற்று, 9 வார்டுகளை கைப்பற்றியுள்ளது; பெரும்பான்மை பெற, 10 வார்டுகள் தேவை என்ற சூழலில், திமுக., கூட்டணிக்கு, இன்னும் ஒரு வார்டு தேவை.
அதிமுக., 6 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். 3 சுயே., வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதற்கிடையில், 3 சுயே., வேட்பாளர்கள் நடுநிலையுடன் இருந்தால், தி.மு.க., தலைவர் நாற்காலியை பிடிக்கும். மாறாக, அவர்கள் அதிமுக.,வுக்கு ஆதரவளித்தால், இரு கட்சிகளும் சமநிலை பெறும்.
இதில், 5வது வார்டில் வெற்றி பெற்ற மோகன், அதிமுக., வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, உட்கட்சி பூசலால், கட்சி சின்னத்தை உதறி, சுயேட்சையாக போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளார். 13வது வார்டில் வெற்றி பெற்ற கார்த்திகேயன், திமுக.,வில் 'சீட்' கிடைக்காததால், அதிருப்தி வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், அவர்கள் இருவரும், அவரவர் சார்ந்த கட்சிக்கு ஆதரவளித்தாலும், திமுக., மன்றத்தை கைப்பற்றும். ஆக, சுயே., வேட்பாளர்களின் கையில் தான், தலைவர் நாற்காலியை அலங்கரிக்கப்போவது யார், என்பது தெரிய வரும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu