லஞ்சம் இல்லாத சமுதாயத்திற்கு மாணவர்களின் பங்களிப்பு முக்கியம்

லஞ்சம் இல்லாத சமுதாயத்திற்கு மாணவர்களின் பங்களிப்பு முக்கியம்
X

அவினாசி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

‘லஞ்சம் இல்லாத சமுதாயம் உருவாக, கல்லுாரி மாணவ, மாணவியரின் பங்களிப்பு முக்கியம்’ என, சட்ட விழிப்புணர்வு முகாமில் தெரிவிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் அவினாசி வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. கல்லுாரி முதல்வர் (கூடுதல் பொறுப்பு) ஹேமலதா தலைமை வகித்தார். லஞ்ச ஒழிப்பு பாசறையின் நிர்வாகி ஈஸ்வரன், லஞ்சமற்ற சமுதாயத்தை உருவாக்குவதில், மாணவ, மாணவியர் ஆற்ற வேண்டிய பங்கு குறித்து விரிவாக விளக்கினார்.

வட்ட சட்டப்பணிகள் குழுவின் செயல்பாடு குறித்து வக்கீல் சத்தியமூர்த்தி பேசினார். கல்லுாரியின் பி.காம் சர்வதேச வணிகவியல் துறைத்தலைவர் பாலமுருகன், எதிர்கால சமுதாயத்தின் வளர்ச்சிக்கு மாணவ, மாணவியரின் பங்களிப்பு குறித்து விளக்கினார். முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்த கல்லுாரியின் ஆங்கிலத்துறை தலைவர் தாரணி நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்!