அவிநாசியில் தொடரும் மழை: ஆற்றோர மக்கள் கண்காணிப்பு

அவிநாசியில் தொடரும் மழை: ஆற்றோர மக்கள் கண்காணிப்பு
X

அவினாசியில் உள்ள நல்லாறு.

தொடர் மழை பெய்து வரும் நிலையில், நல்லாறு ஓட்டியுள்ள குடியிருப்புவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், பல ஆண்டுக்கு பின் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதில், அவினாசி பகுதியில் அதிகளவு மழை பெய்து வருகிறது. நீர்நிலையோரமுள்ள குடியிருப்புகளின் மீது வருவாய்த்துறையினர் கவனம் செலுத்தியுள்ளனர்.

நல்லாற்றை ஒட்டி, ஏராளமான குடியிருப்புகள் உள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் பெய்த பெரு மழையில், அங்குள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அதன் பிறகு தான், அங்குள்ள ஓடை ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது.

அன்னுார், கருவலுார் உள்ளிட்ட இடங்களில் பெருமழை பெய்யும் போது நல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது. அத்தகைய வெள்ள அபாயத்தின் போது, அங்குள்ள மக்களை, பேரூராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன், அரசு பள்ளிகளில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் தயாராக உள்ளன என வருவாய்த்துறையினர் கூறினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!