அவினாசியில் காங்கிரஸ் கட்சியினர் நுாதன போராட்டம்

அவினாசியில் காங்கிரஸ் கட்சியினர் நுாதன போராட்டம்
X

அவினாசியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, அவினாசியில் காங்கிரஸ் கட்சியினர் நுாதன போராட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் கட்சி சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, நாடு முழுக்க, போராட்டம் நடத்தப்பட்டது. இதில், காங்கிரஸ் நிர்வாகிகள், இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்து, அதனருகே சிலிண்டர்களை வைத்து மாலை அணிவித்து, தங்களின் எதிர்ப்பை காண்பித்தனர்.

அவ்வகையில் திருப்பூர் மாவட்டம் அவினாசியில், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சாய் கண்ணன் தலைமையில், அவினாசி பிரதான சாலையில், கட்சியினர் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!