/* */

அவிநாசி; அரசு கலைக்கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த கருத்து பட்டறை

Tirupur News- அவிநாசி அரசு கலைக்கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த கருத்து பட்டறை நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

அவிநாசி; அரசு கலைக்கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த கருத்து பட்டறை
X

Tirupur News- அவிநாசி அரசுக் கலைக்கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமைகள் கருத்து பட்டறை நேர்காணல் நடந்தது. 

Tirupur News,Tirupur News Today- அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவு சார் சொத்துரிமைகள் பற்றிய கருத்து பட்டறை நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற இவ்விழாவினை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ராஜசேகரன் (வழக்கறிஞர் மற்றும் நிர்வாக பங்குதாரர்) புத்தாக்க கண்டுப்பிடிப்புக்களுக்கான அறிவுசார் சொத்து உரிமைகள் (IPR), வடிவுமைப்பு (Design), வர்த்தக முத்திரை (Trade Mark), பதிப்புரிமை (copyright) மற்றும் புவியியல் குறியீடு (Geographical indication) போன்றவைகள் குறித்து விளக்கப் பேசினார். இக்கருத்துப்பட்டறையில் அதுசார்ந்த பல விஷயங்கள் கற்பிக்கப்பட்டது.

மேலும் மாணவர்கள் தொழில் முனைவோர் ஆவதற்காக வழிமுறைகளையும் அதற்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றியும் விவரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவர்கள் தங்களது சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வழிகாட்டி ஆசிரியர்கள், தமிழ்நாடு மாணவ மாணவிகளின் கண்டுபிடிப்பாளர்கள், வெற்றியாளர்கள், புத்தாக்கப்பற்று சீட்டு வெற்றியாளர்கள், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்கள், கல்லூரி மாணவர்கள் அனைவரும் பங்கு பெற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜோ.நளதம் தலைமை வகித்தார். தொழில் முனைவோர் மேம்பாட்டு குழுத் தலைவர் செ பாலமுருகன் சர்வதேச வணிகவியல் துறை தலைவர் முன்னிலை வகித்தார். இதில் அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் நேரலையில் பங்கு பெற்றனர்.

Updated On: 3 Feb 2024 1:28 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  5. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  6. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  7. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை