கருவலுாருக்கு திருப்பூர் கலெக்டர் திடீர் 'விசிட்' செய்தது ஏன்?

கருவலுாருக்கு திருப்பூர் கலெக்டர்  திடீர் விசிட் செய்தது ஏன்?
X

கருவலுார் ஊராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட திருப்பூர் கலெக்டர் வினித். 

கருவலுார் ஊராட்சி அலுவலகத்துக்கு, திருப்பூர் கலெக்டர் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அவினாசி ஊராட்சி ஒன்றியம், கருவலுார் ஊராட்சிக்குட்பட்ட எலச்சிபாளையம், நைனாம்பாளையம் பகுதிகளில் நடந்து வரும் சாக்கடை கால்வாய், குடிநீர் தொட்டி கட்டும் பணியை, மாவட்ட கலெக்டர் வினீத், நேற்று முன் தினம் மாலை பார்வையிட்டார். பின், கருவலுார் ஊராட்சி அலுவலகத்துக்கு சென்ற அவர், பதிவேடுகளை பார்வையிட்டார்.

கருவலுாரில் இறைச்சிக்கடைகளை ஏலம் விடாமல், தொழில் உரிம கட்டணம் வசூலித்து, அனுமதிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து, ஊராட்சி தலைவர் முருகன் விளக்கினார். 'இறைச்சிக்கடைகளை ஏலம் விட வேண்டும்' என, அங்கிருந்த ஓரிருவர் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். இவ்விவகாரம் தொடர்பாக துணை பி.டி.ஓ., ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.

Tags

Next Story
ஈரோடு வாகன தணிக்கையில் 1,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!