அரசுப்பள்ளிக்கு வகுப்பறை கட்டடம்: 'நமது அவிநாசி' அமைப்பு தாராளம்

அரசுப்பள்ளிக்கு வகுப்பறை கட்டடம்:   நமது அவிநாசி அமைப்பு தாராளம்
X

'நமது அவிநாசி' அமைப்பின் சார்பாக பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி 

ஆயக்கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு தன்னார்வ அமைப்பின் மூலம், கூடுதல் பள்ளி கட்டடம் கட்டிக் கொடுக்கப்பட உள்ளது.

அவினாசியை மையமாக வைத்து, 'நமது அவிநாசி' என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் நலன் சார்ந்த பணிகள், மரக்கன்று நடுவது உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்வதை, இந்த அமைப்பு நோக்கமாக கொண்டுள்ளது.

அதன்படி, பழங்கரை ஊராட்சி, ஆயக்கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரின் நலன் கருதி, அங்கு, இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டிக் கொடுக்க முடிவெடுக்கப்பட்டது.

அதற்கான பூமி பூஜை நடந்தது. 'நமது அவிநாசி' அமைப்பின் தலைவர் தாமோதரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். பழங்கரை ஊராட்சி முன்னாள் தலைவர் செந்தில், உறுப்பினர்கள், ஆயிக்கவுண்டன்பாளையம், நல்லிகவுண்டம்பாளையம் ஊர் முக்கியஸ்தர்கள், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!