பெருமாநல்லூர் அருகே அரசு பஸ்சை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பெருமாநல்லூர் அருகே அரசு பஸ்சை முற்றுகையிட்ட பொதுமக்கள்
X

Tirupur News- பெருமாநல்லூர் அருகே அரசு பஸ்சை முற்றுகையிட்ட பொதுமக்கள் (மாதிரி படம்) 

Tirupur News-பெருமாநல்லூர் அருகே சரியான நேரத்துக்கு வராததால், அரசு பஸ்சை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tirupur News,Tirupur News Today- பெருமாநல்லூா் அருகே குறித்த நேரத்துக்கு வராத அரசு பஸ்சை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரில் இருந்து மலையப்பாளையத்துக்கு பெருமாநல்லூா் கொண்டத்து காளியம்மன் கோயில் வழியாக வழித்தட எண் 26 ஏ அரசுப் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் குறித்த நேரத்துக்கு வருவதில்லை என பொதுமக்கள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில், இந்த பஸ்சுக்காக காலையில் மாணவா்கள், வேலைக்கு செல்பவா்கள் என பலா் காத்திருந்தனா். ஆனால், அப்பியாபாளையம் கிராமத்துக்கு காலை 8 மணிக்கு வர வேண்டிய அரசு பஸ், ஒன்றரை மணி நேரம் தாமதமாக 9.30 மணிக்குதான் வந்துள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசுப் பஸ்சை முற்றுகையிட்டு ஓட்டுநா், நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து இனிமேல் குறித்த நேரத்துக்கு பஸ் இயக்கப்படும் என்று நடத்துநா் உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பொதுவாக கிராமப்புற வழித்தடங்களில் சொற்ப எண்ணிக்கையிலான அரசு பஸ்களே இயக்கப்படுகின்றன. பெரும்பாலும் பெருமாநல்லூர், திருப்பூர் போன்ற அருகில் உள்ள நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலையில் காலை, மாலை நேரங்களில் இந்த பஸ்களை மட்டுமே நம்பி மாணவ, மாணவியர் மற்றும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த நேரத்துக்கு பஸ்கள் இயக்கப்படாததால் தொழிலாளர்கள், மாணவ மாணவியர் மிகுந்த அவதிப்படுகின்றனர்.

கிராமப்புற வழித்தடங்களில் பெண்கள் மட்டுமே அதிகளவில் பஸ்களில் பயணிக்கின்றனர். அவர்களும் இலவச பயணம்தான் செய்கின்றனர். மற்ற நேரங்களில் போதிய பயணிகள் இல்லாத நிலையில் சொற்பமாக மட்டுமே பயணிகள் பஸ்களில் வந்து செல்கின்றனர். அதன் காரணமாக சில நடத்துநர்கள், டிரைவர்கள் சரியான நேரத்துக்கு பஸ்களை இயக்காமல் அலட்சியம் காட்டுவதாக கிராமப்புற பொதுமக்களிடையே புகார் இருந்து வருகிறது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கவனிக்கவும், கூடுதல் பஸ்களை கிராமப்புற வழித்தடங்களில் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!