அவினாசியில் பரிசு பொருள் பரிமாறி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

அவினாசியில் பரிசு பொருள் பரிமாறி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
X

அவினாசியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. 

அவினாசி புனித தோமையார் தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி புனித தோமையார் தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. தேவாலய குரு கென்னடி தலைமையில், கூட்டுப்பாடல் திருப்பலி நடத்தப்பட்டது. தொடர்ச்சியாக கிறிஸ்துமஸ் விழா நடந்தது. புனித தோமையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருட்சகோதரிகள் கிறிஸ்துமஸ் பாடல் பாடினர். பங்கு குரு கென்னடி, கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து, அன்பு, பரிவு, இரக்கத்துடன் வாழ வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

பின், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த சிறுவர்களுடன், சிறுவர், சிறுமியர் இணைந்து நடமானடி, மகிழ்வித்தனர். பின், தேவாலய மக்கள் தங்களிடம் இருந்த பரிசுப் பொருட்களை மற்றவர்களுக்கு வழங்கி, அன்பை பரிமாறிக் கொண்டனர். பங்கு மக்களுக்கு, தேவாலயம் சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
how will ai affect our future