திருப்பூர் மாவட்டத்தில் 'சைல்டுலைன் – 1098' நண்பர்கள் வாரம் துவக்கம்

திருப்பூர் மாவட்டத்தில் சைல்டுலைன் – 1098 நண்பர்கள் வாரம் துவக்கம்
X

சைல்டுலைன் – 1098 , சார்பில் கருவலூரில் ஆஸ்ரம குழந்தைகளுடன் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

'சைல்டுலைன் – 1098 , சார்பில் ஆஸ்ரம குழந்தைகளுடன் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

'சைல்டுலைன் – 1098' , சார்பில் ஆஸ்ரம குழந்தைகளுடன் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் நவம்பர் 14 ம் தேதி, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 'சைல்டு லைன்' உடன் இணைந்து பணியாற்றும் ஏனைய துறைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், பொதுமக்களிடையே சைல்டுலைன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஒரு வார காலத்திற்க்கு 'சைல்டுலைன் நண்பர்கள் வாரம்' கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இவ்வருடம் நவம்பர் – 14 முதல் 20 வரை திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் துவக்கமாக அவினாசி, கருவலூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீசங்கரா சேவாலயம், குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கத்தில், சைல்டுலைன் சார்பாக குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

இல்ல குழந்தைகளுக்கு விளையாட்டு பேட்டிகள் நடத்தப்பட்டு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. நிகழ்வினை, சைல்டுலைன் மைய ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல் மற்றும் தினேஷ்பாபு ஆகியோர் ஒருங்கிணைத்தனர். விழாவில், சைல்டுலைன் கவுன்சிலர் தாரணி, உறுப்பினர்கள் ராஜேஷ்வரி, வைஷ்ணவி, அன்புமணி, காயத்திரி பங்கேற்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil