அவினாசி அருகே குழந்தைகள் பாதுகாப்பு உறுதிப்படுத்த நிகழ்ச்சி

அவினாசி அருகே குழந்தைகள் பாதுகாப்பு உறுதிப்படுத்த நிகழ்ச்சி
X

கருக்கன்காட்டுப்புதுார் உயர்நிலைப்பள்ளியில்,பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

அவினாசி அருகே நடுவச்சேரியில், குழந்தைகள் பாதுகாப்பு உறுதிப்படுத்த நிகழ்ச்சி நடைபெற்றது.

அவினாசி அருகே நடுவச்சேரி அருகேயுள்ள கருக்கன்காட்டுப்புதுார் உயர்நிலைப்பள்ளியில், சமூக சமத்துவம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் நடுவச்சேரி ஊராட்சி இணைந்து, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தின.

மாணவி பிரியதர்ஷினி, உறுதிமொழி வாசிக்க பிற குழந்தைள் ஏற்றுக் கொண்டனர். சமூக சமத்துவ மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இயக்குனர் பாண்டிச்செல்வி, நடுவச்சேரி ஊராட்சி தலைவர் வரதராஜன், ஆசிரியர்கள் வெங்கடேஸ்வரி, சங்கரகுமார், ஊராட்சி செயலர் மணிகண்டன், முன்னாள் வார்டு உறுப்பினர் கோகிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
crop opportunities ai agriculture