திருப்பூர் வந்தார் முதல்வர்: அவினாசியில் உற்சாக வரவேற்பு

திருப்பூர் வந்தார் முதல்வர்: அவினாசியில் உற்சாக வரவேற்பு
X
உற்சாக வரவேற்ப்பளித்த திமுகவினர். 
திருப்பூர் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு அவினாசியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், இன்று மாலை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மதியம், 2:30 மணிக்கு அவினாசியை கடந்து திருப்பூர் சென்றார்.

அவருக்கு, அவினாசி திருப்பூர் சாலையில், கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பாண்டு வாத்தியம், தாரை தப்பட்டை முழங்க கட்சியினர் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். வாகனத்தில் வந்த முதல்வர், கட்சியினரை பார்த்து உற்சாகமாக கையசைத்தடியே கடந்து சென்றார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வினித், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செசாங் சாய், அவிநாசி வட்டாட்சியர் ராகவி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் முதல்வரை வரவேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!