அவிநாசி பாரதிய ஜனதா நிர்வாகி திடீர் மாற்றம்

அவிநாசி பாரதிய ஜனதா நிர்வாகி திடீர் மாற்றம்
X
அவினாசியில் பா.ஜ.க. எதிர்பார்த்த வெற்றியை ஈட்டாத நிலையில், நகர நிர்வாகி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி பா.ஜ.க. நகர மண்டல் தலைவராக இருந்தவர் சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி. இஅவர், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, நடந்து முடிந்த தேர்தலில், 5வது வார்டில் போட்டியிட்டு, தோற்ற தினேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜக மாவட்ட துணைத் தலைவராக இருந்த அன்பரசு, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை பாஜக பெறாத நிலையில், இத்தகைய களையெடுப்பு பணி தொடரும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags

Next Story
ai powered agriculture