அவினாசியில் பட்டப்பகலில் செயின் பறிப்பு: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

அவினாசியில் பட்டப்பகலில் செயின் பறிப்பு: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
X

பைல் படம்.

அவினாசியில் பகலில் அரங்கேறிய செயின் பறிப்பு சம்பவம் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி, காமராஜ் நகர், ஜெய்சக்தி அவென்யூ பகுதியில் வசிப்பவர் வனஜா, 54. இவர் நடுவச்சேரியில் உள்ள கருக்கன்காட்டு புதுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

வழக்கம் போல் பள்ளி முடித்து நேற்று மாலை 4:35 மணிக்கு காமராஜ்நகர் பஸ் ஸ்டாப்பில் இறங்கி காமராஜ்நகர் வீதி வழியாக நடந்து வந்துக் கொண்டிருந்தார்.

அப்போது டூவீலரில் வந்த இருவர், வனஜா கழுத்தில் இருந்த தாலி செயின் கருமணி செயின் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் டூவீலரில் வேகமாக மறைந்தனர். புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பறிபோன 5 சவரன் நகையின் மதிப்பு 75 ஆயிரம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

குடியிருப்புகள் நிறைந்த மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மாலை வேளையில் நடந்த இந்த செயின் பறிப்பு சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா