சபலபுத்தி போலீஸ் மீது வழக்குப்பதிவு

சபலபுத்தி போலீஸ் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

கல்லுாரி மாணவியிடம் சபலபுத்தியுடன் நடக்க முயன்ற போலீஸ்காரை ஊர் மக்கள் கடுமையாக தாக்கினர்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி, வெள்ளியம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் காமாட்சி, 40. கல்லுரியில் படிக்கும் இவரது மகளிடம் பேசுவதற்காக, அவரது மொபைல் போனுக்கு அவினாசி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் சுப்ரமணி என்ற போலீஸ்காரர் அழைத்துள்ளார். தன் மகள் பேசுவது போன்றே, காமாட்சியும் பேசியுள்ளார். அவரை வெள்ளியம்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வருமாறு, சுப்ரமணியம் கூறியுள்ளார்.

இந்த விவரத்தை காமாட்சி, தனது கணவர் ஆறுச்சாமியிடம் கூட, அவரும், ஊர்மக்கள் சிலரும் வெள்ளியம்பாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்துள்ளனர். அங்கு சுப்ரமணியம் காத்திருக்க,'எதற்காக என் மகளை தனியாக வர சொன்னாய்?' என கேட்டு, சுப்ரமணியத்தை, கடுமையாக தாக்கி, அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, சுப்ரமணியம் மீது, அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காவலர் சுப்ரமணியம், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!