அவினாசி அருகே அரசு விரைவு பஸ் கவிழ்ந்து விபத்து: 13 பேர் காயம்

அவினாசி அருகே அரசு விரைவு பஸ் கவிழ்ந்து விபத்து:   13 பேர் காயம்
X

சேலம் -  கோவை பைபாஸ் ரோட்டில் , அவிநாசி அருகே சாலையில் கவிழ்ந்த அரசு பஸ்.

அவினாசியில் இன்று அதிகாலை, சேலம் – கோவை பைபாஸ் சாலையில், அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில், 13 பேர் காயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து, நேற்று இரவு, 9:30 மணிக்கு புறப்பட்டு, கோவை நோக்கி, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் வந்து கொண்டிருந்தது. இன்று அதிகாலை, 4:30 மணிக்கு, அவிநாசி எம்.நாதம்பாளையம் பிரிவு பகுதியில் வந்த போது, நிலைத்தடுமாறி ரோட்டின் மையத்தில் கவிழ்ந்தது. அவிநாசி தீயணைப்பு நிலைய வீரர்கள், நெடுஞ்சாலை பணியாளர்கள் மற்றும் நெடுஞ்சாலை போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் கட்டனம்பள்ளியை சேர்ந்த மனோன்மணி, 40, ஓசூரை சேர்ந்த ரமேஷ், 56, சின்னம்மாள், 48, சின்னப்பன், 53, முனீப், கோவை, கணுவாயை சேர்ந்த முனாப், 41, தர்மபுரி, பாப்பிரப்பட்டியை சேர்ந்த வாணீஸ்வரி, 39, சேரன்மா நகரை சேர்ந்த குருவம்மாள், 29, முனிராஜ், 69, தர்மபுரி பாப்பிரப்பட்டியை சேர்ந்த, கருணாநிதி, 43, தர்மபுரி, கடத்துாரை சேர்ந்த மணி, 37, ஒசூர், ஆவரப்பள்ளி ரோடு பகுதியைச் சேர்ந்த, துரைசாமி, 62 உட்பட, 13 பேர் காயமடைந்தனர்.

அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர்கள், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனை கல்லுாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ai healthcare technology